History of Madeena

மதீனா தேசிய பாடசாலையின் வரலாறு

வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் கிரியுள்ள வலயத்தில் நாரம்மல வாரியபொல பிரதான பாதையில் சியம்பலாகஸ்கொடுவை எனும் அழகிய கிராமத்தில் அமைந்து நாடெங்கும் கல்விச் சுடர் பரப்பிக் கொண்டிருப்பதே மதீனா தேசிய பாடசாலையாகும்.

குறுகிய கால வரலாற்றில் அரிய பல சாதனைகளைப் புரிந்து அறிவுச் சுடர் பரப்பி இன்று பொன்விழாக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இப்பாடசாலை நாட்டின் பல்திசைகளிலும் பலதரப்பட்ட பட்டதாரிகளை உருவாக்கி,  கல்விமான்களையும்,  தாராள மனம் படைத்த கொடைவள்ளல்களை யும் வியப்புறச் செய்து அவர்களாலே விதந்துரைக்கப்படுகின்ற அளவுக்கு வரலாறு படைத்துள்ளது. இவ்வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 45வருடங்களில் சகல வசதிகளையும் கொண்ட நாட்டின் அதி உயர்தரமான ஒரு தேசியப் பாடசாலையாகப் பரிணமித்துள்ளது என்றால் அதன் காரண கருத்தாக்களை நாம் நினைவு கூறாமல் இருக்க முடியாது.

இன்று இக்கல்லூரி எமது பிரதேசத்துக்கு மட்டுமல்லாது நாட்டின் எட்டுத்திக்குகளில் இருந்தும் வருகை தந்து கல்வி பயிலும் மாணவவரின் அறிவுக்கண்ணைத் திறந்து விடும் ஒரு கலைக்கூடமாகவும் திகழ்கிறது. இத்தகு சிறப்புக்களைக் கொண்டு இலங்கையின் முன்னனிப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்வதற்கு நம் முன்னோர்கள் தன்னம்பிக்கையோடும் தியாக சிந்தையோடும் அரும்பாடுபட்டு உழைத்தமையே காரணம் எனலாம்.

தற்பொழுது சுமார் 2500 க்கும் மேற்பட்ட மாணவர்களையும் 80 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் உள்ளடக்கி கல்வி, கலை, கலாசாரம், விளையாட்டு, இலக்கியம், சமூக சேவை போன்ற இன்னோரன்ன சகல துறைகளிலுமே வெற்றி நடை போடுவதற்கு இவ்வித்தியாலயத்தில் கடமையாற்றிய நிர்வாகத் திறமை கொண்ட அதிபர்கள்,கடமையுணர்வு கொண்ட ஆசிரியர்கள், இதயபூர்வமான் சேவையுணர்வும் அயரா உழைப்பும்;கொண்ட ஊர்மக்கள் ஆகியோரே காரணகருத்தாக்களாவர்.

இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன் ஊர் மாணவர்கள் பக்கத்து ஊர்களான நெத்திபொலகெதர,கெகுணகொல்ல. போகமுல்ல ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகளுக்கே கல்வி கற்கச் சென்றனர். இந்நிலையில் 1953 ஆம் ஆண்டளவில் இப்பகுதி கிராம விதானையாகக் கடமை புரிந்த குரீக்கொட்டுவையைச் சேர்ந்த மர்ஹ_ம் முஹந்திரம் சுலைமா லெப்பை அவர்களின் ஆலோசனையின் பேரில் மர்ஹ_ம்களான அம்மயன்குளம் ஹமீது லெப்பை விதானை,பறகஹகொடுவ ஏ.அலித்தம்பி, ஏ. இப்றா லெப்பை, சியம்பலாகஸ்கொடுவ ஏ. சாலியா லெப்பை, கஹடகஹமட ஏ. அஹமது லெப்பை, ஏ. அப்துல் ஹமீது, அல்ஹாஜ் எம்.ஏ.அப்துல் சமது ஆகியோரின் முயற்சியின் பயனாக பள்ளிக்குச் சொந்தமான காணியில் ஓலையால் வேயப்பட்ட சிறு கட்டிடத்தில் எந்த வித வேதனங்களும் பெறாத தொண்டாசிரியர்களான மர்ஹம்களான எச்.எல்.யு.எம். ஜூனைத், ஏ.எல்.எம். சுலைமாலெப்பை ஆகிய இருவரையும் ஆசிரியர்களாகக் கொண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

iக்காலகட்டத்தில் தண்டகமுவ பாராளுமன்ற உறுப்பினர் திரு ஐ.எம்.ஆர்.ஏ. ஈரியகொல்ல அவர்களின் முயற்சியினால் 1954 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி 104 மாணவர்களுடன் திரு ஆர். ஜோசப் அவர்களை முதல் அதிபராகக் கொண்டு அரசாங்கப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து திரு ஏ.என். தங்கதுறை, திரு டபிள்யு.டீ. ரொட்ரிகோ என்பவர்கள் அதிபராகக் கடமையாற்றிய காலகட்டங்களில் சிறிய முன்னேற்றம் காணப்பட்டது எனலாம். இரண்டு ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த நிலையில் இருந்த இவ்வித்தியாலயத்தில்1956.01.03 ஆந்திகதி முதல் 6 ஆம் வகுப்பு வரை வகுப்புக்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அப்Nபுhது மாணவர் தொகை 176 இதைத்தொடர்ந்து 1957.01.22இல் அதிபராகப்; பதவியேற்ற ஜனாப் என்.ஏ. சமத் அவர்களின் காலத்தில் 100 x 20 அளவிலான கட்டிடமும் ஆசிரியர் விடுதியும் அமைக்கப்பட்டதோடு 1961.01.02 ல் க.பொ.த. (சா.த) வகுப்புக்களும் ஆரம்பிக்கப் பட்டன. அப்போது மாணவர் தொகை 267 ஆகவும் ஆசிpரியர் தொகை 10 ஆகவும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் 1963 ல் 277 மாணவர்களோடு ஜனாப் கே.ஏ. ரஸல் பாடசாலையைப் பொறுப்பேற்றார். இவரைத் தாடர்ந்து 1965 ல் அதிப்ராகக் கடமையேற்ற எம்.எச்.எம். மஃருப் அதிபராகக் கடமையாற்றி பாடசாலையை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்சென்றார்.

இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த இவ்வித்தியாலயத்தை  1965.07.01 ல் 336  மாணவர்களோடு ஜனாப் யு.எம்.எம். அஷ்ரப் (ஓய்வு பெற்ற நிகவெரடிய தமிழ் வட்டாரக் கல்வி அதிகாரி) அவர்கள் பொறுப்பேற்றார்கள். இக்காலத்தில் இவ்வித்தியாலயம் மேலும் பல வளர்ச்சிகளை அடைந்ததைக் குறிப்பிடலாம். இவரது அயராத முயற்சியின் பயனாக அப்போதைய கல்வி கலாசார அமைச்சராக இருந்த திரு ஐ.எம்.ஆர்.ஏ. ஈரியகொல்ல அவர்களினால் 80 ஒ 20 அளவிலான கட்டிடமும் குடிநீர்க் கிணறும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வந்த காலப்பகுதியில் மர்ஹ_ம் எஸ்.ஐ.இசட். ஆப்தீன், ஜனாப் ஏ.மீராசாஹிப் ஆகியோரும் அதிபர்களாக இருந்து இப்பாடசாலையின் துரித வளர்ச்சியில் பங்கேற்றனர் எனக் கூறலாம்.

1969 முதல் 1970 வரை, 1971 முதல் 1977 வரை, 1989 முதல் 1992 வரை மூன்று கட்டங்களில் இக்கல்லூரியின் அதிபராகக் கடமை புரிந்த ஜனாப் ஏ.எச்.எம். மவ்சூர் அவர்கள் 397மாணவர்களோடும் 15 ஆசிரியர்களோடும் இப்பாட சாலையின் வளர்ச்சிக்கு அரும்பணியாற் றினார். இவரது சேவைக்காலம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். இவரது காலத்திலே கல்வி கலாசார அமைச்சராக இருந்த திரு ஐ.எம்.ஆர்.ஏ. ஈரியகொல்ல அவ்களினால் தற்போதைய விளையாட்டு மைதானம் அமைந்துள்ள் 2 ஏக்கர் காணி பெற்றுக் கொடுக்கப்பட்டது.

அன்பான பார்வையையும் கனிவான பேச்சையும் கொண்ட இவரது அயரா உழைப்பினால் 1971.01.01 ல் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரான திரு ஜீ.டப்லியு. சமரசிங்ஹ அவர்களினால் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற நிலையில் இருந்து மதீனா மகா வித்தியாலயம் என்ற பெயரோடு மகாவித்தியாலயமாகத் தரமுயர்த் தப்பட்டதோடு மட்டுமன்றி 80 x 20 அளவிலான பாடசாலைக் கட்டிடத்தையும் 30 x 20 அளவிலான விவசாயக் கூடத்தையும் தந்துதவினர். மேலும் பழைய மாணவர்களதும் அரசஉத்தியோகத்தர்களதும் உதவியினால் 40 x 20 அளவிலான தொழிற்பயிற்சிக் கூடமும் 60 x 20அளவிலான விஞ்ஞான கூடமும் அமைக்கப்பட்டது.

தன் சேவையில் சலிக்காத அதிபர்கள் மாணவர்கள் கல்வியோடு மட்டும் நின்றுவிடாது ஏனைய புறக்கிருத்திய வேலைகளிலும் ஈடுபடுத்தும் நோக்கில் பாடசாலையின் கன்னி முயற்சியான கலைதீபம் சஞ்சிகை வெளியீட்டு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது மட்டுமன்றி க.பொ.த. (உ.த) வகுப்புக்களும் இவர் காலத்திலேயே (1972) ஆரம்பிக்கப்பட்டதோடு முதன் முதலில் பல்கலைக்கழகப் பிர்வேசமும் நடந்து பாடசாலை புகழ்மணம் பரப்பத் தொடங்கிற்று.

இவரைத் தொடர்ந்து இவ்வித்தியாலயத்தின் பழைய மாணவரும் பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியருமான மர்ஹம் ஏ.கே.எம்.ஏ. ஸலாம் அவர்கள் அதிபராகப் பணி புரிந்த காலத்தை எம்மவர்களால் மறக்க முடியாததாகும். தன்னையே இவ்வித்தியாலயத்துக்காக அர்ப்பணித்துக் கொண்ட இவர் அதிபராக பணி புரிந்த காலத்திலேயே பாதகர்களின் துப்பாக்கி வேட்டுக்கு இரையாகி உயிர் நீத்தார். ( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). 1977.09.19முதல் 1980.05.06 வரை முதற் கட்டமாகவும் 1984.06 முதல் 1989.05.12 வரை இரண்டாம் கட்டமாகவும் இவர் அதிபராகச் சேவையாற்றிய காலப்பகுதியில் இப்பாடசாலை கல்வ கலை,கலாசாரம், விவசாயம், விளையாட்டு, தொழில்நுட்பம் எனப் பல துறைகளிலும் உயர்ந்து சிறப்புறத் தொடங்கியது.

இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்தும் தூரப் பிரதேச மாணவர்கள் கல்விக்காகத் திரண்டு வர அவர்களுக்கான விடுதி வசதிகளின் தேவை ஏற்பட்டது. விடுதிக் கட்டிடம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி கொடைவள்ளல்அல்ஹாஜ் எம்.ஐ.எம். நளீம் ஜே.பி. அவர்களைச் சந்தித்து எடுத்துக்கொண்ட முயற்சியின்பலனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஆண்கள் விடுதி 1979 ஆம் ஆண்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது. மேலும் அன்றைய கல்விச் சேவைகள் அமைச்சர் திரு லயனல் ஜயதிலகஅவர்களினால் 80 x 20 அளவிலான ஒரு கட்டிடமும் 70 x 60 அளவிலான நன்னீர் மீன் வளர்ப்புத் தடாகமும் பெற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் 80 x 20 அளவிலான இருமாடிக் கட்டிடமும்,பெண் மாணவியரின் வசதி கருதி அப்பாஸ் அன்ட் கம்பனி உரிமையாளரான அல்ஹாஜ்யு.எல்.எம். சசீப் அவர்களின் உதவியால் கட்டப்பட்ட மகளிர் விடுதி, பெற்றோரின் பெரும்உதவியினால் ஏற்படுத்தப்பட்ட மனையியல் கூடமும், வாசிகசாலை, விஞ்ஞான ஆய்வுகூடம்என்பவற்றைப் பெற்றெடுத்து மாணவரின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியுள்ளார்.இக்காலப் பகுதியில் கல்வித்துறையில் மாத்திரமன்றி வட்டார, மாவட்ட விளையாட்டுப்போட்டிகளிலும் சாகித்திய விழாக்களிலும் முன்னனியில் நின்று பல வெற்றி முத்திரைகளைஇப்பாடசாலை பெற்றுள்ளது.

1980 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கடமையாற்றிய ஜனாப் எம்.சீ. ஆதம்புள்ள அவர்கள் பாடசாலை முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டார். மகளிர் விடுதியின் தேவையை உணர்ந்து தற்போதைய மகளிர் விடுதி அமைந்துள்ள காணியைப் பெற்றெடுப்பதில் அயராது உழைத்தார். அதில் வெற்றியும் கண்டார்.

1992 முதல் இவ்வித்தியாலயத்தின் பொற்காலம் ஆரம்பமாயிற்று என்றே கூறலாம். இவ்வித்தியாலயத்தின் பெயரும் புகழும் எங்கும் எவரும் பேசக்கூடியதாகப் பரவத்தொடங்கியதோடு வெளிமாவட்ட மாணவர்கள் சாரிசாரியாக வந்து கல்விச் செல்வத்தைப் பெற்றுப் பயனடையும் ஒரு நிறுவனமாக மாறத் தொடங்கியது. இவ்வாறு மாற்றங்கள் நடைபெறக் காரணகர்த்தாவாக இருந்து ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இப்பாடசாலை அதிபராகக் கடமை புரியும் அல்ஹாஜ் எம்.எல்.எம். இஸ்மாயில் என்றால் அது மிகையாகாது. 1410 மாணவர்களோடும் 65 ஆசிரியர்களோடும் இருந்த இப்பாடசாலை இவர் வந்தது முதல் கணிசமான அளவு அதிகரிக்கத் தொடங்கியது. இன்று சுமார் 2500 க்கும் மேற்பட்ட மாணவர்களையும் 80 க்கும் மேலான் ஆசிரியர் குழாத்தையும் கொண்ட ஒரு கல்விக் கூடமாகத் திகழ்கிறது என்றால் அதிபரவர்களின் அயராத முயற்சியேகாரணமெனலாம். மேலும் 1 சீ தரத்தில் இருந்த இப்பாடசாலை 1992.07.13 ல் 1 ஏபி தரத்துக்கு தரம் உயர்த்தப்பட்டு உயர்தர விஞ்ஞான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. குருநாகல் மாவட்டத்துக்கே சாத்தியமற்றது எனக் கைவிடப்பட்டிருந்த விஞ்ஞானக் கல்விiயை மதீனாப் பூமியில் விதைத்து அதன் அறுவடையை எமது பிரதேசமும் நம் தேசமும் சர்வதேசமும்அனுபவிப்பதென்றால் அது அதிபரவர்களின் கவலையும் பிரார்த்தனையுமேயாகும். மேலும்விஞ்ஞான ஒன்றியத்தின் வெளியீடான தீபம் சஞ்சிகை மாணவர்களின் ஆக்கங்களுக்குஊக்கமளித்து பிரதி வருடமும் வெளிவந்து மாணவர்களின் கலையுணர்வுக்கு களமாயுள்ளது.

மிகவும் குறுகிய காலத்தில் உயர்தர விஞ்ஞான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதாயினும் முதல் முயற்சியிலேயே மருத்துவ பீடத்துக்கும் பொறியியல் பீடத்துக்கும் ஏனைய கணித விஞ்ஞானத் துறைகளுக்கும் மாணவர்களை அனுப்பி சாதனை

படைத்துக்கொண்டிருக்கிறது. இத்தகு சாதனைகளின் பெருபேற்றினாலும் அதிபரவர்களின் அயரா உழைப்பினாலும் மிகக் குறுகிய காலத்தில் 1994.05.18 ல் தேசியபாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. விஞ்ஞானத் துறைகளில் மட்டுமன்றி க.பொ.த. (உ.த) கலை வர்த்தகப் பிரிவுகளிலும் ஒவ்வொரு வருடமும் பல மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிச் செல்வது குறிப்பிட வேண்டியதொன் றாகும். வர்த்தகத் துறையில் குருநாகல் மாவட்டத்திலேயே எமது மதீனா தேசிய பாடசாலை சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலும் ஏனைய கல்வி நிலையங்களிலும் தம்மை வினைத்திறனுடையவர்க ளாக மாற்றிக்கொண்டி ருக்கிறார்கள். வர்த்தகத் துறை ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டலின் பேரில் வர்த்தக மஞ்சரி என்ற சஞ்சிகை மாணவர்களின் சுயசிந்தனையையும் ஆளுமையையும் வளர்த்துக்கொண்டிருக்கின்றது.

இதே போன்று க.பொ.த. (சா.த) இலும் இக்கல்லூரி முன்னனியிலேயே உள்ளது. இறுதியாக2003 ல் வெளிவந்த பெறுபேறுகளின் படி 87 வீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் க.பொ.த. (உ.த)க்கு பூரண தகுதி பெற்று எமது கிரியுள்ள வலயத்திலேயே முதன்மை ஸ்தானத்தில் உள்ளது.

கிரியுள்ள, குளியாபிட்டிய வலயங்களில்இக்கல்லூரியே 10 அதிவிஷேட சித்திகளைப் பெற்ற மாணவர்கள் பலரைக் கொண்டிருந்தது. மேலும் 5 ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளோடு மாணவர்கள் பலர் ஒவ்வொரு வருடமும் தெரிவுசெய்யப்படுகின்றனர்.

சர்வதேச மொழியும் காலத்தின் தேவையுமான எமது சிறார்கள் சிறந்த தேர்ச்சியினைப் பெறவேண்டும் என்ற நல் நோக்கில் 2002 முதல் தரம் 6ல் இருந்து ஆங்கில மொழிமூலமான வகுப்புக்களை ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச பாடசாலைகளுக்குச் சென்று ஆங்கில மொழி மூலம் கல்வி கற்க வாய்ப்பில்லாத மாணவருக்கு இது ஒரு வரப்பிரசாதமேயாகும்.

இன்று புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கணணிக் கல்விக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. முழு உலகுக்கும் அத்தியவசியமான கற்றல் பகுதியாக வியாபித்துள்ள கணணிக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்ந்த அரசு தெரிவுசெய்யப்பட்ட சில பாடசாலைகளில் இதற்கான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. அந்த வகையில் எமது மதீனா தேசிய பாடசாலையிலும் குளிரூட்டப்பட்ட தனியான ஒளி ஒலி கூடங்களில்;வசதியாக கணணிக் கல்வியைக் கற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதோடு அனுபவமும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களினால் தரம் 6 முதல் கணணி அறிவு போதிக்கப்பட்டு வருகின்றது.

கல்வித்துறையில் மட்டுமல்லாது விளையாட்டுத்துறையிலும் தேசியமட்டத் தில் சிறந்து விளங்குகின்றது. எடுத்துக்காட்டாக 1997 ல் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 19 ன் கீழ் உதைபந்தாட்டப் போட்டி யில் வெள்ளிப் பதக்கம் பெற்றமையும், 1998 ல் நடைபெற்ற மைலோ கிண்ணத்துக்கான போட்டித்தொடரில் வடமத்திய,வடமேல், சப்ரகமுவ மாகாணங்களில் முதலிடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் எமது லெதர் அணி குருநாகல் சென்ட் ஆன்ட், வயம்ப ரோயல், கேகாலை மகாநாம,பொல்கஹவெல சென் பெனடிக்ட் போன்ற அணிகளைத் தோற்கடித்து முதலாம் சுற்று செம்பியனாகத் தெரிவாகியது. குளியாபிடிய மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்று வெற்றி முத்திரை பதித்துள்ளது.

அகில இலங்கைத் தமிழ் மொழித்தினம், ஆங்கில தினப் போட்டிகளில் பல வெற்றிகளைக் கண்டு மதீனாவின் புகழ் நிலைநாட்டப்பட்டுள்ளது. நிர்வாகத் திறமையும் எவரையும் கவரும் பேச்சுத் திறனும் கொண்ட இவரது விடாமுயற்சியின் பயனாக பௌதீக வளங்களும் பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கின. விளையாட்டு மைதானத்தை ஒட்டி அமைந்த இரு மாடிக்கட்டிடங்கள் மூன்று, குழாய் நீர் விநியோகம், வகுப்பறைகளுக்கான ஒலிபெருக்கி வசதி, அர்ரஹ்மான் நிறுவனத்தினரது அனுசரனையுடன் அமைக்கப்பட்ட கலாசார மண்டபம், பாடசாலை விடுதி போன்றஇடங்களுக்கான தொலைபேசி வசதி என்பனவும் அதிபரின் பிரார்த்தனைகளின்பிரதிபலிப்பேயாகும்.

15.06.2001 ல் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த திரு சுசில் பிரேம் ஜயந்தவினால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்ட கேட்போர் கூடம் மிக அழகாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது. இக் கட்டட அறையினுள் சுமார் 1200 பார்வையாளர்கள் ஒன்றுகூடலாம்.

கடமையே கண்னெனக் கொண்டு கடின முயற்சியோடு செயற்பட்ட அதிபரவர்களின் கனவுகள் நனவாகி, நிஜமாகி நிறைவேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பாடசாலை மேலும் புதுப் பொலிவு பெற்றுள்ளது. அனைதுக் கட்டிடங்களுக்கும் நிறம் பசப்பட்டு கண்ணுக்குக் கலை விருந்தளிக்கின்றன. கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் பாடசாலையின் பொன்விழாவை முன்னிட்டு தற்போது (2004) ஆட்சியில் உள்ள அரசு பல பௌதீக வளங்களை வழங்கியுள்ளது.

திறந்து வைக்கப்படவுள்ள 12 வகுப்பறைகளைக் கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் அதிபரின் காரியாலயத்தின் அருகே கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. நவீன வசதிகளுடன் அதிபர் காரியாலயம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் என 4 தொகுதிகள் கொண்ட சகல வசதிகளும் கொண்ட மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பெற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகளின் அனுசரணையுடன் பாடசாலை வளவைச் சுற்றி சுற்று மதில் கட்டப்பட்டுள்ளது. பாதையின் இருமருங்கிலும் அமைந்துள்ள இப்பாடசாலைக்கு சுற்று மதில் ஒன்றின் தேவை மிக அவசியமானதே. இத்தேவையை உணர்ந்த பழைய மாணவர்கள் இவ்வரிய செயலில் செவ்வனே செயற்படுவது பாராட்டத்தக்கதேயாகும். மட்டுமன்றி இவர்கள் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்ட கட்டிடத்துடன் கூடிய அறிவித்தல் பலகையையும் பெற்றுக்கொடுத்துள்ளார்கள். பாடசாலையின் அமைப்பு சிறந்த முறையிலும் அழகான முறையிலும் மாற்றப்பட்டுள்ளது. வெளி அலங்காரம் திட்டமிட்ட முறையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

அத்தோடு பாடசாலை நிர்வாகம் சிறந்த முறையில் ஒழுங்காகப் பகுத்து ஏழுத்து மூலம் ஒவ்வொரு குழுவினருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதோடு தனிப்பட்ட பொறுப்புக்களும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பாட இணைச் செயற்பாடுகளாக,

  1. தேசிய கடெட் பிரிவு
    சாரணர் இயக்கம்
    3. சென்ட் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ்
    4. விஞ்ஞான ஒன்றியம்
    5. மனித உரிமை கற்கை நெறி (கொழும்புப் பல்கலைக்கழகம்)
    6. மதி நா சஞ்சிகை
    7. வர்த்தக மன்றம்
    8. தமிழ் மன்றம்
    9. மாணவர் வழிகாட்டலும் ஆலோசனையும்
    10.  English Club
  2. இத்தகு வியத்தகு வெற்றிகளையும்சாதனைகளையும் படைத்து சமூகத்துக்குப் பொருத்தப ்பாடுடைய மதீனா தேசியக் கல்லூரியின் வளர்ச்சியில் அயராது உழைத்த அதிபர்கள், ஆசான்கள், தன்னலம் கருதாது சமூக நலனிலே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அதிபரவர்கள் உடலாலும் பொருளாலும் வார்த்தைகளாலும் உதவிகள் புரிந்த நலன் விரும்பிகள், தனவந்தர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரையும் மதீனா என்றும் நன்றிக் கடனுடன் நோக்கும் என்பது உறுதி. தன்னை நாடி வருவோரை வரவேற்று அறிவை அள்ளி வழங்கும் மதீனாக் கலையகம் என்றும் சிறப்புடன் திகழ இறைவன் என்றும் அருள் புரியட்டும்.

 

ஆர்.எஸ் ரிஸ்வானா  (ஆசிரியை)