Welcome to Madeena

13 Year Guaranteed Education

சா/த பரீட்சையில் சித்தி பெறவில்லையா?
 
மனம் தளர வேண்டாம்!
 
சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலை உங்களை அன்புடன் அரவணைக்க காத்திருக்கிறது

13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டம்

உயர்தரம் A/L கற்காமலேயே பட்டமொன்றைப் பெற மாற்று வழி!

கல்வி அமைச்சானது, 13 வருட உறுதிப்படுத்தப் பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

2024 (2025) க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் “W” (சித்தியின்மை) பெற்றி ருந்தாலும்கூட, இரண்டு வருடப் படிப்புக்குப் பிறகு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பட்டம் ஒன்றைப் பெறலாம்.

க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தி பெற்ற மாணவ ர்கள், உயர்தரத்தில் Bio, Maths, Commerce, Arts, E-Tech, B-Tech ஆகிய ஆறு பிரிவுகளில் கல்வி கற்க வாய்ப் பைப் பெறுகின்றனர்

அதே சமயம், சா/த பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்கள், உயர்தரத்திற்குச் சமமான 7வது பிரிவான தொழில் பிரிவில் (Vocational Stream) கல்வி கற்று, தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வாய்ப்பு கிடைக்கும்

தொழில் பிரிவு பற்றிய விளக்கங்கள்

தொழில் பிரிவு ஒரு இரண்டு வருட கற்கை நெறியாகும்

ஒவ்வொரு வருடத்திலும் 3 தவணைகள் வீதம், 2 வருடத்திலும் மொத்தம் 6 தவணைகளைக் கொண்டிருக்கும்

முதல் வருடக் கல்வித்திட்டம்:

முதல் தவணை:

தொழில் பிரிவு மாணவர்கள் அனைவரும் கட்டாயமாகப் பின்வரும் ஒன்பது அறிமுகப் பாடங்களைக் கற்க வேண்டும் (தெரிவு இல்லை):

1. முதலாம் மொழி சிங்களம் / தமிழ்
2. வணிக ஆங்கிலம் மற்றும் தொடர்பாடல் திறன்கள்
3. அழகியல்
4. ICT திறன்கள்
5. குடியுரிமை தொடர்பான திறன்கள்
6. சுகாதாரம் மற்றும்  சமூக நலனுக்கான  வாழ்க்கை திறன்கள்
7.தொழில்முனைவோர் திறன்கள்
8. தொழில் வழிகாட்டல்
 
இரண்டாம் & மூன்றாம் தவணைகள்:

பின்வரும் 26 பாடங்களில் இருந்து விரும்பிய மூன்று பாடங்களைத் தெரிவு செய்து கற்க வேண்டும்:

1. Child Psychology & Care
2. Health & Social Care
3. Physical Education & Sport
4. Arts & Crafts
5. Event Management
6. Performing Arts
7. Interior Designing
8. Fashion Designing
9. Graphic Designing
10. Art & Designing
11. Web Designing
12. Landscaping
13. Applied Horticultural Studies
14. Livestock Product Studies
15. Food Processing Studies
16. Aquatic Resources Studies
17. Plantation Product Studies
18. Construction Studies
19. Automobile Studies
20. Electrical & Electronic Studies
21. Textile & Apparel Studies
22. Metal Fabrication Studies
23. Aluminum Fabrication Studies
24. Software Development
25. Environmental Studies
26. Tourism & Hospitality

இரண்டாம் வருடக் கல்வித்திட்டம்:

இரண்டாம் ஆண்டில், முதல் வருடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளில் எடுத்த மூன்று பாடங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தைத் தெரிவு செய்து, இரண்டாம் வருடம் முழுவதும் அதனைக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும்

இரண்டாம் தவணையில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் தொழிற் பயிற்சி பெற வேண்டும்

இறுதியில் பொதுப் பரீட்சையில் சித்தி பெற்று, NVQ 4 சான்றிதழைப் பெற முடியும்.

NVQ 4 இற்கு அப்பால்:

உயர்கல்வி வாய்ப்புகள்

நீங்கள் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் குறித்த கற்கைநெறியைத் தொடர்வதன் மூலம் NVQ 5 / NVQ 6 வரையிலான உயர் டிப்ளோமா பட்டத்தையும் பெறலாம்

மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ரீதியான பல்கலைக்கழகமொன்று இரத்மலானையில் தொழில் பிரிவு பல்கலைக்கழகமாக இயங்குகிறது

இதில் குறித்த கற்கைநெறியைத் தொடர்வதன் மூலம் பட்டமொன்றை (NVQ 7) பெற முடியும்