Unlimited Fiber Internet Connection at Madeena for teaching-learning process

கடந்த வருடம் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும் கற்றல் கற்பித்தல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக அதிவேக இணைய வசதியை வழங்கும் திட்டத்தின் கீழ் எமது பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில்,

ஃபைபர் (Fiber Internet Connection) இணைப்பினூடாக வை-ஃபை (Wi-Fi) மூலம் இணைய வசதி வழங்கும் வேலைகள் அனைத்தும் கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நிறைவடைந்தன.

இந்த வை-ஃபை இணைய வசதியை மதீனாவின் ஆசிரியர்கள் அனைவரும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக தற்போது பாடசாலை நேரத்தில் தடையின்றிப் பயன் படுத்த முடியும்.

வகுப்பறைகள் அனைத்திற்கும் முழுமையான வயர்லெஸ் நெட்வர்க் தொழிநுட்பத்தில் (wireless network) இணைய வசதி வழங்குவதற்காக 13 வயர்லெஸ் ஏக்ஸஸ் பாயிண்டுகள் (Wireless Access Point) பாடசாலையின் பல்வேறு இடங்களில் SLT நிறுவனத்தால் பொருத்தப்பட்டுள்ளதுடன் அவற்றினூடாக எல்லையற்ற (unlimited data package) இணைய பயன் பாட்டிற்கான டேட்டா பொதியும் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணைய வசதியை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இணைய வசதியை உங்கள் மடிக்கணினி, டேப்லட் மற்றும் ஸ்மாட் தொலைபேசி மூலம் வை-ஃபை ஊடாக அணுக முடியும்.

உங்கள் மடிக்கணினி மற்றும் மொபைலில் வை-ஃபை வசதியை ஆன் (on) செய்ததும் உங்களுக்கு அண்மையிலுள்ள ஏக்ஸஸ் பொயிண்டின் (Access Point ) பெயரைக் காண்பிக்கும் .

அதற்குரிய பாஸ்வர்டை வழங்கி இணைந்து கொள்ள முடியும்.

அவற்றிற்குரிய Wi-Fi ID (SSID) அனைத்தும் SLT_MNS……… வடிவில் இருக்கும்

உதாரணம்:

SLT_MNSMedia (தற்போதைய அதிபர் காரியாலய பிரதேசம்)

சில இடங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட Access Point களையும் காண்பிக்கும்.

அவ்வாறான இடங்களில் வலிமை கூடிய சிக்னல் கிடைக்கும் Access Point இல் இணைந்து கொள்ளலாம்.

இவற்றிற்கான பாஸ்வர்டை அனூப்-ஐ (ஆசிரியர்) தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

எனினும் இந்த பாஸ்வர்டை வெளி நபர்களுடனோ மாணவர்களுடனோ பரிமாறிக் கொள்வது தவறாகும்.

அனுமதியற்ற அணுகல்களைக் கட்டுப் படுத்தும் நோக்கில் ஆசிரியர்கள் பயன் படுத்தும் சாதனங்களின் மேக் முகவரி (MAC Address) பின்னர் ஆசிரியர்களிடம் கோரப்படும்.

இணைய இணைப்பு பற்றிய ஆசிரியர்களின் பின்னூட்டங்களை (feedback) மதீனா வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவிட முடியும்.

Check Also

Kids Sports 1