இம்முறை O/L பரீட்சைக்குத் தோற்றவுள்ள தரம் 11 மாணவர்களின் பெற்றோர்களுடனான ஒன்றுகூடல் பகுதித் தலைவர் ரிஸ்வானா ஆசிரியை தலைமையில் நேற்றைய தினம் (2023.03.21) பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் போது கடந்த வாரம் நடந்து முடிந்த மூன்றாம் தவணைப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ‘A’ சித்தி (9A) பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டதோடு தரம் 11 அனைத்து சமாந்தர வகுப்புகளான 11 A, B, C, D E ஆகியவற்றில் ஒவ்வொரு வகுப்புகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் தனியாகவும் தரம் 11 அனைத்து வகுப்புகளும் உள்ளடங்களாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் எதிர்வரும் க.பொ.த(சா/த) பரீட்சைக்கான தயார்படுத்தல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதனையடுத்து தரம் 10 மாணவர்களின் பெற்றோர்களுடனான ஒன்றுகூடலும் பகுதித் தலைவர் ரிஸ்வானா ஆசிரியை தலைமையில் நேற்றைய தினம் இடம் பெற்றது.
மூன்றாம் தவணைப் பரீட்சையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுத் திறமை காண்பித்த தரம் 10 மாணவர்களும் தரம் 11 மாணவர்கள் போன்றே வகுப்பு ரீதியாக தனியாக கௌரவிக்கப்பட்டனர்.
Mobile Phone Photos by Riswan Bro