இலங்கையிலுள்ள பாடசாலைகள் மற்றும் பாடசாலை மாணவர்களை டிஜிட்டல் புரட்சிக்கு தயார்படுத்துவதற்காக எதிர்க் கட்சித் தலைவர் திரு சஜித் பிரேமதாச அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் கணினிகள் வழங்கும் ”සක්වළ சக்வல”- (பிரபஞ்சம் / Universe) எனும் வேலைத்திட்டத்தின் கீழ் மதீனா தேசிய பாடசாலைக்கும் ஸ்மார்ட் வகுப்பறைக்கான ஸ்மார்ட் போர்ட் மற்றும் டெஸ்க்டாப் கணினிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதனை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நாளை ஜூன் 15, 2024 சனிக்கிழமை மதீனா தேசிய பாடசாலையில் நடை பெறவுள்ளது.
இந்நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் திரு சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக் கலந்து கொள்ள வருகை தரவுள்ளார்.
இந்நிகழ்வை முன்னிட்டு எமது பழைய கணினிக் கூடம் மறு சீரமைக்கப்பட்டு புதிய தோற்றத்தைப் பெற்றுள்ளது.
அதற்கான வேலைகளில் அதிபர்கள், ஆசிரியர்கள், சிற்றூழியர்கள், மாணவர்கள், பழைய மாணவ்ர்கள், பெற்றார்கள் என பலரும் மும்முரமாக ஈடுபட்டு தங்கள் பங்களிப்பச் செய்தார்கள்
குறிப்பாக முன்னாள் பிரதேச சபை அங்கத்தவர்களான முகம்மத் சபீர் மற்றும் சாஜஹான் சலீம் இருவரினதும் பங்களிப்பு மெச்சத் தக்கது.