Menu
madeena library
மதீனா நூலகம்
மதீனா நூலகம், மாணவர்களின் கற்றல் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்யும் வகையில், அமைதியான, ஊக்கமளிக்கும் மற்றும் கற்றலுக்கு உகந்த சூழலில் அமைந்துள்ளது
எமது இந்த நிரந்தர நூலக கட்டடம் 2008 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது
அதற்கு முன்னர் தற்போதைய ஆரம்பப் பிரிவில் நூலகம் இயங்கி வந்தது
எமது நூலகத்தில் படைப்பாற்றலையும், ஆராய்ச்சித் திறன்களையும் வளர்க்கும் வாய்ப்புகள் நிரம்பியுள்ளன
பாடசாலையின் நேர சூசியின் அடிப்படையில், நூலகப் பாடவேளையில் மாணவர்கள் கட்டாயம் வருகை தர வேண்டும் என்ற வழிகாட்டல், எமது மாணவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தையும், புத்தகப் பழக்கத்தையும் பெரிதும் ஊக்குவிக்கிறது
இந்த முயற்சி அவர்களின் கல்வித் திறன்கள், ஆய்வு மனப்பான்மை மற்றும் இணைப்பாடவிதானச் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக விளங்குகிறது
தற்போது, 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்
இது, நூலகத்தின் வளங்கள் மற்றும் சேவைகள் எவ்வளவு திறம்பட பயன்பாட்டில் உள்ளன என்பதை விளக்கும் சான்றாகும்
நூலகம் “வாசகர் நேரம் பேணுதல்”, “நூலுக்கு ஏற்ற வாசகர்”, “நூல்கள் அனைத்தும் பயன்பாட்டிற்கே” போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது
நூல்கள் அனைத்தும் பாடத்திட்டம் மற்றும் பொருளடக்கம் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு, வண்ணக் குறியீடுகள் (Colour Coding) இடப்பட்டுள்ளன
இதன் மூலம், மாணவர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை விரைவாகவும் எளிதாகவும் தேடிப் பெற முடிகிறது
எமது நூலகத்தில் பாடநூல்கள், கலை-இலக்கிய நூல்கள், பருவ வெளியீடுகள், ஆய்விதழ்கள் என ஏராளமான நூல்கள் உள்ளன
நூலகம் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து மேலும் முன்னேறும் வகையில், டிஜிட்டல் நூலகம் (E-Library), ஆன்லைன் கற்றல் மேடைகள், மாணவர் ஆராய்ச்சி திட்டங்களுக்கான உதவி போன்ற வசதிகள் விரைவில் கிடைக்கும் எனவும் அதன் மூலம் மாணவர்களின் கற்றல் அனுபவம் மேலும் சிறப்புறும் எனவும் நம்புகிறோம்
தற்போது எமது நூலகத்தின் பொறுப்பாளராக (நூலகராக) ….. கடமையாற்றி வருகிறார்
அவருக்குத் துணையாக ……. ஆகியோர் சிறந்த சேவையாற்றி வருகின்றனர்
எமது நூலகம் பாடசாலை இயங்கும் நாட்களில் காலை ஏழு முப்பது மணி முதல் பிற்பகல் இரண்டு முப்பது மணி வரை திறந்திருக்கும்
மாணவர்கள் பாடசாலை நேரத்தில் அவர்களுக்குரிய நேரங்களில் நூலகத்தை பயன்படுத்த முடிவதோடு புத்தகங்களை இரவல் (lending) வாங்கவும் முடியும்











