GIT Exam 2019, 2020, 2021, 2022

2022 ஆம் ஆண்டுக்குரிய GIT பொதுத் தகவல் தொழிநுட்பப் பரீட்சையுடன் முன்னர் நடைபெறாமல் போன 2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளுக்குரிய பரீட்சைகளும் எதிர்வரும் நாட்களில் எழுத்து மூல பரீட்சையாக (Written Test) ஒரே தினத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் பரீட்சைக்கான நிகழ்நிலை விண்ணப்பம் தற்போது கோரப்பட்டுள்ளது

விண்ணப்ப முடிவு திகதி : நவம்பர் 4, 2022

GIT 2019 – AL 2020
இவர்களுக்கான GIT பரீட்சை விண்ணப்பம் தனியாக 2019 ஆம் வருடம் ஓன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் பரீட்சை நடை பெறவில்லை. இம்மாணவர்கள் தற்போது பாடசாலையிலிருந்து விலகியிருப்பதால் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் மாணவர்கள் மட்டும் தங்கள் பெயர் விவரங்களை பாடசாலையைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதற்கு கீழுள்ள link ஐப் பயன் படுத்த முடியும்
https://forms.gle/FvyaU1vTQDR63LAb6
இந்த இணைப்பு மதீனா மாணவர்களுக்கு மட்டுமானது

GIT 2020 – AL 2021
இவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் உயர் தர பரீட்சைக்குத் தோற்றியவர்கள். இவர்கள் GIT பரீட்சைக்கென தனியாக விண்ணப்பிக்கவில்லை. இருந்தாலும் இவர்களின் விவரங்கள் AL 2021 தரவுத் தளத்தளத்திலிருப்பதால் (database) புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.

இம்மாணவர்களும் தற்போது பாடசாலையிலிருந்து விலகியிருப்பதால் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் மாணவர்கள் மட்டும் தங்கள் பெயர் விவரங்களை பாடசாலையைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கீழுள்ள கூகுல் படிவ link ஐ அதற்குப் பயன் படுத்த முடியும்
https://forms.gle/FvyaU1vTQDR63LAb6
இந்த இணைப்பு மதீனா மாணவர்களுக்கு மட்டுமானது

GIT 2021 – AL 2022
இவர்கள் இன்னும் பாடசாலையில் கற்பவர்கள். இவ்வருடம் உயர் தர பரீட்சை எழுத இருப்பவர்கள். இவர்களும் GIT பரீட்சைக்கென தனியாக விண்ணப்பிக்கவில்லை. இவர்களின் விவரங்களும் AL Exam 2022 தரவுத் தளத்தளத்திலிருப்பதால் புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.

இந்த மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்.

GIT 2022 – AL 2023
இவர்கள் தற்போது தரம் 12 இல் கற்பவர்கள். அடுத்த வருடம் (2023) உயர் தர பரீட்சை எழுத இருப்பவர்கள். இவர்களுக்கான விண்ணப்பம் மாத்திரம் புதிதாகத் தயாரிக்கப் பட வேண்டியுள்ளது.

அவர்கள் தங்கள் விவரங்களை கீழுள்ள கூகுல் படிவ link ஐப் பயன் படுத்தி அனுப்ப முடியும் https://forms.gle/6SjRzJyaqxAA5akY8

(GIT 2022 மாணவர்கள் மாத்திரம் மேலுள்ள இணைப்பைப் பயன்படுதுங்கள்)

2019(2020), 2020(2021) மாணவர்களில் பரீட்சை எழுத விரும்பும் மாணவர்களின் பட்டியலை மாத்திரம் பரீட்சைத் தினைக்களம் அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளது.

இந்த மாணவர்கள் தற்போது பாடசாலையிலிருந்து விலகியிருப்பதால் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் மாணவர்கள் மட்டும் தங்கள் பெயர் விவரங்களை பாடசாலையைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பெயர் விவரங்களை முன்னரே உறுதி செய்பவர்கள் மாத்திரமே பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

அனுமதிக்கப் படாத விடத்து பாடசாலை அதற்குப் பொறுப்பேற்காது.

இந்த மாணவர்களில் பலர் தற்போது பாடசாலையோடு தொடர்பில் இல்லாததால் அவர்களை அறிந்தவர்கள் / நண்பர்கள் இருப்பின் இத்தகவலை அவர்களுக்கு அறியச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அந்தந்த ஆண்டுகளுக்குரிய விண்ணப்பங்களை தனித்தனியாக தயாரிக்க வேண்டியுள்ளதால் உடனடியாக உங்கள் விவரங்களை கூகுல் ஃபோர்ம் ஊடாக அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.

இந்த கூகுல் ஃபோர்ம் தகவல் திரட்டலுக்காக மாத்திரமே பயன் படுத்தப்படும் என்பதுடன் இது இறுதியான விண்ணப்பம் அல்ல என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இறுதி விண்ணப்பம் தயாரிக்கப்பட்டவுடன் அதனை மாணவர்கள் சரி பார்த்து உறுதி செய்தவுடன் அவர்களிடம் கையொப்பமும் பெறப்படும்.

விண்ணப்ப முடிவு திகதி நவம்பர் 4 என்பதால் உங்கள் விவரங்களை நவம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கூகுல் ஃபோர்மை நிரப்பும் போது உங்கள் முழுப்பெயர், பிறந்த திகதி, அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றை பிழையின்றி நிரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த கூகுல் ஃபோர்மை டெஸ்க்டாப் கணினி, மடிக்கணினி, டேப்லட் கணினி, செல்லிட தொலைபேசி என எந்த சாதனத்திலிருந்தும் நிரப்பி அனுப்ப முடியும்.

மேலதிக விவரங்களுக்கு : 0761710883 (ரியாப்தீன் சர்) 077-6005015 (அனூப்)

Check Also

Kids Sports 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *