Interrupted GIT Exams to be held soon

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 2019, 2020, 2021மற்றும் 2022 வருடங்களுக்கானது

2018 ஆம் ஆண்டிற்குரிய மேற்குறித்த பரீட்சை நிகழ்நிலை (Online) முறைமையில் 2019 ஒக்டோபர் மாதம் நடாத்தப்பட்டு பெறுபேறுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

2019, 2020, 2021, 2022 ஆண்டுகளுக்குரிய பரீட்சை நிலவிய கொவிட் 19 தொற்று காரணமாக உரிய தினங்களில் நடாத்துவதற்கு இயலாமல் போனதுடன் எதிர்வரும் நாட்களில் விரைவில் நடாத்தி முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப் பரீட்சை நிகழ்நிலை முறைமையில் நடாத்துவதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறைந்த மட்டத்தில் காணப்படுதல், தினமும் தொடர்ச்சியான மின்வெட்டு, கணினிகளிலுள்ள குறைபாடுகள், குறைந்த இணையத்தள வசதிகள் போன்ற பிரச்சினைகள் காரணமாக குறிப்பிட்ட நான்கு வருடங்களுக்குமான இப் பரீட்சையை எழுத்து மூலமாக (Written Test) ஒரே தினத்தில் நடாத்தி முடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Online Test முறைமை தற்காலிகமாகக் கை விடப்படுகிறது

எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வருடங்களுக்கும் (2019, 2020, 2021, 2022) நிகழ்நிலை முறைமை ஊடாக அந்தந்த வருடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பரீட்சைக்குத் தோற்றவுள்ள நான்கு வருடங்களுக்குமுரிய விண்ணப்பங்களை கீழேயுள்ளவாறு மாணவர்கள் சமர்ப்பிக்க முடியும்.

GIT 2019 – AL 2020
இவர்களுக்கான GIT பரீட்சை விண்ணப்பம் தனியாக 2019 ஆம் வருடம் ஓன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் பரீட்சை நடை பெறவில்லை.

இம்மாணவர்கள் தற்போது பாடசாலையிலிருந்து விலகியிருப்பதால் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் மாணவர்கள் மட்டும் தங்கள் பெயர் விவரங்களை பாடசாலையைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதற்கு கீழுள்ள link ஐப் பயன் படுத்த முடியும்
https://forms.gle/FvyaU1vTQDR63LAb6
இந்த இணைப்பு மதீனா மாணவர்களுக்கு மட்டுமானது

GIT 2020 – AL 2021
இவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் உயர் தர பரீட்சைக்குத் தோற்றியவர்கள். இவர்கள் GIT பரீட்சைக்கென தனியாக விண்ணப்பிக்கவில்லை. இருந்தாலும் இவர்களின் விவரங்கள் AL 2021 தரவுத் தளத்தளத்திலிருப்பதால் (database) புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.

இந்த மாணவர்களும் தற்போது பாடசாலையிலிருந்து விலகியிருப்பதால் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் மாணவர்கள் மட்டும் தங்கள் பெயர் விவரங்களை பாடசாலையைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கீழுள்ள link ஐ அதற்குப் பயன் படுத்த முடியும்
https://forms.gle/FvyaU1vTQDR63LAb6
இந்த இணைப்பு மதீனா மாணவர்களுக்கு மட்டுமானது

GIT 2021 – AL 2022
இவர்கள் இன்னும் பாடசாலையில் கற்பவர்கள். இவ்வருடம் உயர் தர பரீட்சை எழுத இருப்பவர்கள். இவர்களும் GIT பரீட்சைக்கென தனியாக விண்ணப்பிக்கவில்லை.

இவர்களின் விவரங்களும் AL Exam 2022 தரவுத் தளத்தளத்திலி ருப்பதால் புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. இவர்கள் அனைவரும் GIT 2021 பரீட்சைக்குத் தோற்றுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

GIT 2022 – AL 2023
இவர்கள் தற்போது தரம் 12 இல் கற்பவர்கள். அடுத்த வருடம் (2023) உயர் தர பரீட்சை எழுத இருப்பவர்கள்.

இவர்களுக்கான GIT பரீட்சைக்குரிய தனியான விண்ணப்பம் விரைவில் ஓன்லைன் மூலம் அனுப்பப்படும். அதற்கான விவரங்கள் பாடசாலையில் பெறப்படும்

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அந்தந்த ஆண்டுகளுக்குரிய விண்ணப்பங்களை தனித்தனியாக தயாரிக்க வேண்டுமென்பதுடன் அவ்விண்ணப்பங்களை நிகழ்நிலை முறைமையில் அனுப்புவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களும் உரிய திகதியும் பரீட்சைத் திணைக்களத்தினால் பின்னர் அறியத்தரப்படும்.

Source
Circular No. 6/32/GIT/2020 Exams Dept

Check Also

Special Meetings with the Parents of Grade 10 & 11 Students

இம்முறை O/L பரீட்சைக்குத் தோற்றவுள்ள தரம் 11 மாணவர்களின் பெற்றோர்களுடனான ஒன்றுகூடல் பகுதித் தலைவர் ரிஸ்வானா ஆசிரியை தலைமையில் நேற்றைய …