Reziya teacher retired from Teacher Service

ரெஸியா டீச்சர் ஓய்வு பெற்றார்

ஆசிரியர் சேவை என்பது ஓர் உன்னத சேவையாகப் போற்றப் படுகின்றது. அந்த வகையில் 34 வருடங்கள் ஆசிரியர் சேவையை நிறைவாகப் பூர்த்தி செய்து இன்று 2022.01.19 ஆம் திகதி ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் விஞ்ஞானப் பாட ஆசிரியையும் மதீனாவின் உதவி அதிபருமான ரெஸியா டீச்சர் அவர்களை வாழ்த்துவதில் அகம் மகிழ்கிறேன்.

ரெஸியா டீச்சர் அவர்கள் குருனாகல் பானகமுவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இவர் 1967 ம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ம் திகதி ஓய்வு பெற்ற அதிபர் ஜலால்தீன் (Sir), மற்றும் பாத்திமா பீபீ தம்பதிகளுக்குக் குடும்பத்தின் மூத்த மகளாகப் பிறந்தார்.

சிறந்த கல்விப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை பானகமுவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியர் மடத்திலும் (Holy Family convent) பெற்றுக் கொண்டார்.

உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரிவைத் தெரிவு செய்த இவர் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறு பேற்றைப் பெற்று உயர் தரப் பெறுபேற்றின் அடிப்படையில் விஞ்ஞான கணித ஆசிரியராக நியமனம் பெற்றார்.

1987  ஆம் ஆண்டு  குளி / எஹட்டுமல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஒரு விஞ்ஞானப் பாட ஆசிரியையாக தனது ஆசிரியர் சேவையை ஆரம்பித்தார்.

அங்கு தொடர்ந்து மூன்று வருடகாலம் பணியாற்றிய பின்னர் எமது  பாடசாலையின் முன்னாள் அதிபரான எம் அனைவரதும் அன்புக்குரிய பாயிஸ் (Sir) அவர்களைக் கரம் பிடித்த பின்னர் 1991 ஜனவரி 15 ஆம் திகதி எமது மதீனா தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்தார்

அன்று முதல் தனது ஓய்வுக் காலம் வரை தன்னால் முடிந்த வரையில் மாணவர் கல்வி நலன்களுக்காகத் தன்னை அர்ப்பணித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு உதவி அதிபராக இருந்து பாடசாலையின் நிர்வாகத்திற்கும் ஆக்க பூர்வமான ஒத்துழைப்பை வழங்கி பாடசாலையின் வளர்ச்சியில் ஒரு பங்காளியாகத் திகழ்ந்தார்.  

அமைதியான சுபாவம் கொண்டவர் ரெஸியா டீச்சர். எப்போதுமே தான் உண்டு தன் வேலையுண்டு என தன் கடமையில் கண்ணாக இருந்தவர்.

பாயிஸ் ஸர் ரெஸீயா டீச்சர் தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள்; மூத்த மகள் ஃபஸ்லா மதீனா தேசிய பாடசாலையில் தரம் 1 முதல் கற்று உயர் தரத்தில் கணித பிரிவில் ஆங்கில மொழி மூலம் கற்று பின்னர் மென்பொறியாளர் துறையில் பட்டம் பெற்று தற்போது ரிதீகம பிரதேச செயலகத்தில் தகவல் தொழிநுட்ப பிரிவில் மேலாளராகவும்,

மகன் ஃபிர்னாஸ் மதீனா தேசிய பாடசாலையில் தரம் 1 முதல் பயின்று உயர் தரத்தில் ஆங்கில் மொழி மூலம் கணித பிரிவில் கற்று பின்னர் CIMA கற்கை நெறியைப் பூர்த்தி செய்து தற்போது கட்டார் நாட்டில் ஒரு நிறுவனத்தில் கணக்காளராகவும் பணியாற்றுகின்றனர்.

ரெஸியா டீச்சர் அவர்களின் நிறைந்த அறிவும் அவர் பெற்றுக் கொண்ட பட்டறிவும் எம் மாணவர் சமுதாயத்திற்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பது எனது அவா.

தனது கடமையை சிறப்பாக நிறை வேற்றிய மனத் திருப்தியுடன் ஓய்வு பெறம் ரெஸியா டீச்சர் அவர்களின் ஓய்வுக்காலம் உடல் உள ஆரோக்கியம் கொண்டதாக அமைவதற்கு எல்லாம் வல்ல இறைவனை நாமும் பிரார்த்திப்போம்.

ரிஸ்வானா டீச்சர்

Check Also

Special Meetings with the Parents of Grade 10 & 11 Students

இம்முறை O/L பரீட்சைக்குத் தோற்றவுள்ள தரம் 11 மாணவர்களின் பெற்றோர்களுடனான ஒன்றுகூடல் பகுதித் தலைவர் ரிஸ்வானா ஆசிரியை தலைமையில் நேற்றைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *