Madeena Media Club

போட்டோகிரஃபி (photography), வீடியோகிரஃபி(videography) சார்ந்த டிஜிட்டல் ஊடகங்களில் (digital media) மாணவர்களின் ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் விரைவில் (?) ஆரம்பிக்கப்படவிருக்கிறது மதீனா மீடியா கிளப் (ஊடக கழகம்)

  • பாடசாலை நிகழ்வுகளைப் புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ பதிவு செய்தல்
  • குறும்படங்கள் (Short Film) தயாரித்தல்
  • சமூக வலைத்தள பயன் பாடு – யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் படங்கள் / வீடியோக்களைப் பதிப்பித்தல்
  • பாடசாலை விடயங்கள் சார்ந்த ஒலி வடிவ அறிவிப்புகள் audio based announcements
  • ஒலி பெருக்கியில் தினசரி அல்லது வாராந்தம் செய்தி வாசித்தல் (News Reading)
  • இணைய வானொலி (Online Radio ) நடாத்தல்
  • மீடியா கிளப் அங்கத்தவரிடையே வாட்ஸ்-அப் குழுவொன்றை உருவாக்குதல்
  • புகைப்பட கண்காட்சி நடாத்தல் (exhibition)
  • மாதாந்த மின் புத்தக (e-book) வெளியீடு
  • Banner கள் தயாரித்தல் (Graphic Designing tasks)
  • Blog (வலைப் பதிவு) உருவாக்கம்
  • களப்பயணங்கள் எற்பாடு செய்தல் (field trips) – தொலைக் காட்சி / வானொலி நிலையங்கள்
  • போட்டிகள் நடாத்தல் / பங்கு பெறச் செய்தல் (competitions)
  • பயிற்சிப் பட்டறைகள் (workshops) எற்பாடு செய்தல்

போன்ற பல செயற்பாடுகள் மூலம் மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும்

அனைத்து பாடசாலை  நிகழ்வுகளையும் புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ  பதிவு செய்தலும் மதீனா  ஊடகக் கழக  உறுப்பினர்களின் பணியாக இருக்கும்.  

இதன் மூலம் புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல் மற்றும் மின்னணு தொழில்நுட்பங்களில் (electronic media) மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட முடிவதோடு அத்துறைகளில் மாணவர்களின் திறமையையும் வளர்க்க முடியும்.

மேலும், பாடசாலை நிகழ்வுகளின் போது தன்னார்வப் பணி (volunteering) செய்வதன் மூலம் மாணவர்கள் சிறந்த  அனுபவத்தைப் பெறலாம் மற்றும் தங்கள் பொறுப்புணர்வையும்  வளர்த்துக் கொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்ட விடயங்களில்  ஆர்வம்  உள்ள  தரம் 9 மற்றும் தரம் 9 ற்கு மேற்பட்ட மாணவர்கள்  மதீனா மீடியா கிளப்பில் உறுப்பினராக சேரலாம்.

மாணவர்களின் திறன்களை இனம் கண்டு உரிய பிரிவில் ஈடு படுத்தப்படுவார்கள்

உறுப்பினராக சேர விரும்பும் மாணவர்களின் முழுமையான பங்களிப்பு எதிர் பார்க்கப்படும்.

அவர்களை வழி நடாத்தவும், அவர்களுக்குப  பக்க பலமாக இருக்க விரும்பும் ஆசிரியர்களும் மதீனா மீடியா கிளப்பில் சேர முடியும்.

ஆசிரியர்களின் கருத்துக்களையும் எதிர் பார்க்கிறோம்.



Check Also

Special Meetings with the Parents of Grade 10 & 11 Students

இம்முறை O/L பரீட்சைக்குத் தோற்றவுள்ள தரம் 11 மாணவர்களின் பெற்றோர்களுடனான ஒன்றுகூடல் பகுதித் தலைவர் ரிஸ்வானா ஆசிரியை தலைமையில் நேற்றைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *